News October 16, 2025
பண்டிகைகளுக்கு CM வாழ்த்து சொல்லாதது ஏன்?

எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு CM பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் போது, பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவிக்கலாமே என வானதி சட்டப்பேரவையில் கேட்டார். இதற்கு, வாழ்த்து சொல்வது அவர்களுடைய நிலைப்பாடு என சேகர்பாபு பதில் அளித்தார். பிளவுவாதத்தை நாடு முழுவதும் பரப்புபவர்கள், குறிப்பிட்ட திருவிழாக்களுக்கு வாழ்த்து சொல்லவில்லை என ஏங்குவது, ஆடு நனைகிறதே என ஓநாய் கவலைப்படுவதற்கு ஒப்பாகும் எனவும் சாடினார்.
Similar News
News October 17, 2025
மனம் கவர்ந்த மகா நடிகைக்கு இன்று ஹேப்பி பர்த்டே!

சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும், இன்று இந்திய சினிமாவில் தனி இடத்தை உருவாக்கி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தேசிய விருதை வென்ற இவரின் சினிமா கேரியர், பல வெற்றிகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கியது. தென்னிந்திய சினிமாவில் உச்சம் தொட்டவர், தற்போது பாலிவுட்டிலும் தனது தடத்தை பதிக்க தொடங்கிவிட்டார். உங்களுக்கு பிடிச்ச கீர்த்தி சுரேஷ் படம் எது?
News October 17, 2025
PoK உருவாவதற்கு நேருவே காரணம்: ஜிதேந்திர சிங்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) உருவாவதற்கு வழிவகுத்த போர் நிறுத்தத்திற்கு நேருவே காரணம் என்று அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேலுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையை அளித்திருந்தால், பாக்., – காஷ்மீர் பிரச்னையே எழுந்திருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்றும் கூறினார்.
News October 17, 2025
சுகரை கட்டுக்குள் வைக்கும் அற்புத பானம்!

சுகரை கட்டுக்குள் வைக்க மருந்துகள் அவசியம் என்றாலும், உணவின் மூலமாகவும் அதனை நீங்கள் சரி செய்யலாம். இதற்கு சிம்பிளான ஒரு பானம் இருக்கிறது. ➤ஒரு பாகற்காய்யை சிறிய துண்டுகளாக வெட்டவும் ➤அதை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து, ஒரு சிட்டிகை உப்பு (அ) எலுமிச்சை சாறுடன் கலந்துகொள்ளுங்கள் ➤தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பலர் பலனடையட்டும் SHARE.