News April 16, 2024

100% வாக்குப் பதிவை வலியுறுத்தி பணி

image

தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு 100% வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு கட்ட விழிப்புணர்வுகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகின்றனர். தென்காசியில் இன்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தும் வகையில் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் மகளிர் குழுவினர் பங்கேற்றனர்.

Similar News

News September 26, 2025

தென்காசி: கம்மி விலையில் ஆன்மீக சுற்றுலா செல்ல ஆசையா?

image

தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல எதுவாக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நவ திருப்பதி, காஞ்சிபுரம், கும்பகோணம் ஆகிய ஆன்மீக தலங்களுக்கு சுற்றுலா பேக்கேஜ் செயல்பாட்டில் உள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்கள் பயண டிக்கெட்டை குறைந்த விலையில் புக் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து கம்மி விலையில் ஊர் சுற்றி பாருங்க.

News September 26, 2025

தென்காசியில் கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்க்கு பருவ மழை காரணமாக இன்று (செப் 26) பிற்பகல் 1 மணி வரை 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வெளியில் சென்றுள்ள நன்பர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துங்கள். இடி, மின்னல் நேரங்களில் மரத்த்கின் கீழ் நிற்பதை தவிர்க்கவும்.

News September 26, 2025

குற்றாலத்தில் ஓரமாக நின்று குளிக்கலாம்

image

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மாலை பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அறிவிப்பு தாண்டி தண்ணீர் கொட்டி வருகிறது. அருவி நீராட வரும் சுற்றுலா பயணிகள் ஓரத்தில் நின்று குளிக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

error: Content is protected !!