News October 16, 2025
அரசன் படத்தின் அசத்தல் அப்டேட்!

பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிம்புவின் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ தியேட்டரில் இன்று மாலை 6:02 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு, படத்தின் புது போஸ்டர் ஒன்றை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில், வடசென்னை யூனிவர்சில் தான் இப்படத்தின் கதைக்களமும் அமைந்துள்ளது. அனிருத் இசையில் உருவாகி வரும் படத்தின் ப்ரொமோ நாளை யூடியூப்பில் காலை 10: 07 மணிக்கு வெளியாகிறது.
Similar News
News October 17, 2025
2026 டி20 உலகக் கோப்பை: 20 அணிகள் இவை தான்

Asia-EAP Qualifier tournament-ல் ஜப்பானை வீழ்த்தியதன் மூலம் UAE, 20-வது மற்றும் கடைசி அணியாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, இலங்கை, ஆப்கன், ஆஸி., வங்கதேசம், இங்கி., தெ.ஆப்பிரிக்கா, USA, வெ.இண்டீஸ், அயர்லாந்து, நியூசி., பாக்., கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், UAE ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
News October 17, 2025
ATM யூஸ் செய்வதற்கு முன் இதை கவனிங்க!

*ATM மையத்தில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பின், உடனடியாக வங்கி (அ) போலீஸை அணுகவும்.
*ATM செயல்பாட்டுக்கான SMS, Gmail-ஐ கண்காணியுங்கள்.
*ATM கார்டு தொலைந்தால் (அ) திருடப்பட்டால் உடனடியாக வாடிக்கையாளர் சேவையை அணுகி ‘Block’ செய்யுங்கள்.
*6 மாதத்திற்கு ஒருமுறை PIN-ஐ மாற்றுங்கள். *1234, பிறந்த தேதி போன்ற எளிதான PIN-களை தவிருங்கள். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.
News October 17, 2025
BREAKING: CP ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்ததில், வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த், சசிகலா ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.