News October 16, 2025
திருச்சி: சொந்தமாக தொழில் தொடங்க கடன் உதவி

திருச்சி மாவட்டத்தில் கூலித்தொழில் செய்பவர்கள் சொந்தமாக தொழில் தொடங்க ‘கலைஞர் கைவினை’ திட்டம் மூலம் ரூ.50,000 முதல் ரூ.3 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கடன் தொகையில் 25% சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. <
Similar News
News October 17, 2025
திருச்சி: மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுகோள்

தீபாவளி தினத்தன்று உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கடந்தாண்டை போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மாசற்ற வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
மணப்பாறை: வேளாண்மை அலுவலகத்தில் ஆய்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண்மை அலுவலகத்தின் செயல்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சிவராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News October 16, 2025
திருச்சி: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

திருச்சி மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!