News October 16, 2025

சன் பார்மா குறித்தான செய்தி- விளக்கம்

image

கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன், அக்.09 அன்று மத்திய பிரதேச போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அச்செய்தி வெளியீட்டில், தவறுதலாக “சன் பார்மா” நிறுவனத்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது ஒரு உண்மைத் தவறு. இதற்கும் சன் பார்மா நிறுவனத்திர்க்கும் தொடர்பு இல்லையெனவும், புகைப்படம் தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Similar News

News October 17, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில்இன்று (16.10.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News October 17, 2025

சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

image

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டம்ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தரவில்லை; பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணியிடங்களை நிரப்பவில்லை. சொன்னதை செய்வோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; சொன்னீர்களே செய்தீர்களா? இன்னும் மூன்றே மாதங்கள் தான். இபிஎஸ் தலைமையில் நமது ஆட்சி அமைந்து விடும்” என தெரிவித்தார்.

News October 17, 2025

சாரி சொல்லும் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

image

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் 5 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை சாலையில் நடமாட முடியவில்லை. திமுக ஆட்சியில் 24 லாக்அப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. அந்த குடும்பங்களை போனில் அழைத்து முதலமைச்சர் ‘சாரி’ சொல்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதானவர் ‘சார்-ன்னு’ சொல்கிறார் என தெரிவித்தார்.

error: Content is protected !!