News October 16, 2025
தருமபுரி: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

தருமபுரி மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 16, 2025
தருமபுரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
இனி பதிவுசெய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதி

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
News October 16, 2025
டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்கலாம்

2025ஆம் ஆண்டிற்கு பட்டியல இன மக்களின் முன்னேற்றத்திற்கான தொண்டாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்படுகின்றது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் சென்னை-05 அறிந்து கொள்ளலாம்.