News October 16, 2025

மலேசியாவில் மர்ம காய்ச்சல்: மீண்டும் Pandemic?

image

மலேசியாவில் 6,000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் Pandemic அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே மலேசியாவில் XFG என்ற புதிய வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மலேசியா முழுவதும் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

Similar News

News October 17, 2025

‘Bahubali: The Epic’ படத்தின் முன்பதிவு வசூல் இவ்வளவா?

image

‘பாகுபலி’ படங்களின் 2 பாகங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ள ‘Bahubali: The Epic’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 3 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை $60,000 (இந்திய மதிப்பில் ₹52.78 லட்சம்) வரை முன்பதிவில் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

News October 17, 2025

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு? Clarity

image

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக நீட்டிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என PIB Fact Check தெரிவித்துள்ளது. முன்னதாக, ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்து இருந்தார். தற்போதை நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது.

News October 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 17, புரட்டாசி 31 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம். ▶வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

error: Content is protected !!