News October 16, 2025

சட்டப்பேரவையில் எதிரொலித்த ‘கிட்னி திருட்டு’

image

சட்டப்பேரவையில் ‘கிட்னி திருட்டு’ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடிய ஹாஸ்பிடல் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிட்னி மட்டுமின்றி கல்லீரலும் திருடப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Similar News

News October 17, 2025

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு? Clarity

image

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக நீட்டிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என PIB Fact Check தெரிவித்துள்ளது. முன்னதாக, ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது குறித்த எந்த பரிசீலனையும் அரசிடம் இல்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்து இருந்தார். தற்போதை நிலவரப்படி, மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60-ஆக உள்ளது.

News October 17, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 17, புரட்டாசி 31 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:00 AM -10:30 AM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம். ▶வழிபாடு: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்.

News October 17, 2025

1,400 மரண தண்டனைகள் கொடுக்க வேண்டும்

image

வங்கதேச முன்னாள் PM ஷேக் ஹசினாவிற்கு 1,400 மரண தண்டனைகள் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு வக்கீல் முகமது தாஜுல், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இன்னும் ஒரு மரண தண்டனை கூட வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சிக் கவிழ்ப்பிற்கு தூண்டிய மாணவர் போராட்டத்தின் போது 1,400 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!