News October 16, 2025
விஜய் கட்சிக்கு தலித்துகள் சென்றால்.. திருமாவளவன்

விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் பெருமளவு தவெகவிற்கு சென்று விடுவார்கள் என சோசியல் மீடியாக்களில் பேசியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு சென்றால், அவர்கள் விசிகவில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றும், கொள்கையற்ற பதர்கள் எனவும் விமர்சித்துள்ளார். தன்னால் நீக்கப்பட்ட சிலரும் BJP-யில் இணைந்து தற்போது சங்கிகளாக மாறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Similar News
News October 17, 2025
1,400 மரண தண்டனைகள் கொடுக்க வேண்டும்

வங்கதேச முன்னாள் PM ஷேக் ஹசினாவிற்கு 1,400 மரண தண்டனைகள் கொடுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு வக்கீல் முகமது தாஜுல், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் வலியுறுத்தியுள்ளார். ஆனால், இன்னும் ஒரு மரண தண்டனை கூட வழங்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் ஷேக் ஹசினா ஆட்சிக் கவிழ்ப்பிற்கு தூண்டிய மாணவர் போராட்டத்தின் போது 1,400 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
News October 17, 2025
கம்பீருடன் ரோஹித்.. கேப்ஷன் ப்ளீஸ்!

இந்திய அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ரோஹித் நீக்கப்பட்ட பிறகு, முதன்முறையாக அவர் கம்பீருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்ட போது, கம்பீர் ஏதோ அட்வைஸ் கொடுக்க, அதை ரோஹித் கைகட்டியபடி தீவிரமாக கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை கமெண்ட்டில் சொல்லவும்
News October 17, 2025
சோகத்தில் முடிந்த டாம் குரூஸின் காதல் கதை

ஹாலிவுட்டில் முன்னணி நடிகரான டாம் குரூஸும், நடிகை அனா டி அர்மாஸும் காதல் பறவைகளாக பறந்து வந்தனர். இருவரின் திருமணமும் விண்வெளியில் நடக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகி, பலரை பிரமிக்க வைத்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இருவரும் இப்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. திருமணம் வரை சென்ற 9 மாத காதலின் முறிவுக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.