News October 16, 2025

நாகை வணிகர்களுக்கு கடும் எச்சரிக்கை

image

நாகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பலகாரங்கள் விற்பனையில் ஈடுபடுவோர் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யக்கூடாது. இது கண்டறியப்பட்டால் சம்பவயிடத்திலேயே அபராதம் விதிப்பதுடன், வணிக உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவின்குமார் எச்சரித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று(அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

மாசற்ற தீபாவளி; விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்

image

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளியை கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் நாகூர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி, கீழ்வேளுர் போன்ற முக்கிய பகுதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியது.

News October 16, 2025

நாகை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

image

நாகை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!