News October 16, 2025
LSG அணியில் இணைந்தார் கேன் வில்லியம்சன்!

LSG அணியின் வியூக ஆலோசகராக (Strategic Advisor) கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் தலைமையிலான அணியில் அவர் ஹெட் கோச் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து வியூகங்களை வகுக்கவுள்ளார். 2018, 2019 & 2021-ம் ஆண்டுகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளதால், கேன் வில்லியம்சன் வருகை அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும் என LSG நிர்வாகம் நம்புகிறது.
Similar News
News October 17, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.17) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 17, 2025
₹10,00,000 இருந்தால் ஜான் சீனாவை பார்க்கலாம்

WWE குத்துச்சண்டை வரலாற்றில் மிகவும் பிரபலமான ஜான் சீனா விரைவில் ஓய்வு பெறுகிறார். டிச.13-ம் தேதி பாஸ்டனில், ஜான் சீனாவின் இறுதி மோதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் டிக்கெட் விலை லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது. ₹10 லட்சம், ₹8.30 லட்சம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டாலும், ஜான் சீனாவின் ஆட்டத்தை பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் போட்டி போட்டு டிக்கெட் வாங்குகின்றனர்.
News October 17, 2025
ஸ்விக்கி ஆஃபர்: தங்கம் இனி டோர் டெலிவரி

தீபாவளியை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் தங்கம் ஆர்டர் செய்தால், அது வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும். வரும் 18-ம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்படும் நிலையில், அன்று பலரும் தங்கம், வெள்ளி வாங்குவார்கள் என்பதால் ஸ்விக்கி இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் 1 முதல் 10 கிராம் 999 ஹால்மார்க் தங்கம், ஒரு கிலோ வெள்ளி கட்டி வரை ஆர்டர் செய்து 10-15 நிமிடங்களுக்குள் பெறலாம்.