News April 16, 2024
தொழில் வளத்தை பெருக்குவதே நோக்கம்

திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். படப்பை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அனைத்து மாவட்டங்களும் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் என்பதுதான் நமது குறிக்கோள் எனக் கூறினார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொழில் வளத்தை பெருக்க முனைப்புடன் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 18, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 431 ▶குறள்: செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. ▶ பொருள்: இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்.
News August 18, 2025
பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்கிறார் திருமா: எல்.முருகன்

பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்கிறார் என எல்.முருகன் விமர்சித்துள்ளார். கூட்டணியில் இருந்து M.P, MLA ஆக வேண்டும் என்பதற்காக பட்டியலின மக்கள் எப்படி போனால் தனக்கு என்ன என்ற எண்ணத்தில் திருமாவளவன் இருப்பதாக கூறினார். கடந்த 5 ஆண்டுகளாக பட்டியலின மக்களின் பிரச்சனைகள் பற்றி அவர் வாயே திறக்கவில்லை என்றும், மாறி மாறி பேசி வருவதால் அவர் நிலையாக இல்லை என்பதை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
News August 18, 2025
ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்தவர்கள் RSS: கார்கே

சுதந்திர போராட்ட வீரர்கள் PM மோடியின் பேச்சைக் கேட்டால் வெகுண்டு எழுந்துவிடுவார்கள் என மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்டத்தில் RSS-க்கு பங்கு உண்டு என மோடி சுதந்திர தின உரையில் பேசியிருந்தார். இதுபற்றி பேசிய கார்கே, சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த தகவல்களை ஆங்கிலேயர்களுக்கு அளித்தவர்கள் RSS என்றும், அவர்களில் சிலர் ஆங்கிலேயர்களிடம் கருணை மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.