News October 16, 2025
மடகாஸ்கரில் ராணுவ ஆட்சி

அரசுக்கு எதிரான Gen Z போராட்டத்தால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு தப்பியோடினார். இதனையடுத்து, அங்கு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த ஆட்சி கவிழ்ப்பை வழிநடத்திய ராணுவ தளபதி ராண்ட்ரியானிரினா புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) மடகாஸ்கரை, கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்துள்ளது.
Similar News
News October 16, 2025
இனி Lip Balm வேண்டாம்; இத யூஸ் பண்ணுங்க

குளிர்காலத்தில் உதடுகள் வரண்டு போவதால் வெடிப்புகள் ஏற்படும். இது உங்கள் முக அழகை கெடுக்கிறது. இதற்காக சிலர் லிப் பாம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தற்காலிக தீர்வாகவே இருக்கிறது. உங்கள் உதடுகள் மென்மையாக மாற லிப் பாமுக்கு பதில் பாதாம் எண்ணெய் லேசாக தடவிப் பாருங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமாகிறது. SHARE.
News October 16, 2025
விஜய் முக்கிய முடிவு.. 20 நாளில் இதுவே முதல்முறை

கரூர் சம்பவத்துக்கு பிறகு பெரிதாக வெளியே வாராமல் இருந்த விஜய், முதல்முறையாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளார். நேற்று ஜாமினில் வெளிவந்த தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இருவரும் தங்கள் குடும்பத்துடன் விஜய்யை சந்தித்துள்ளனர். அப்போது, விரைவில் தான் கரூர் வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு விஜய் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
News October 16, 2025
கட்சியை அழிப்பது அன்புமணியின் நோக்கம்: அருள்

கட்சியை அழிப்பதுதான் அன்புமணியின் நோக்கம் என பாமக MLA அருள் விமர்சித்துள்ளார். அன்புமணியை அடையாளம் காட்டியதே ராமதாஸ்தான் எனவும், அவர் உயிரோடு இருக்கும் வரை கட்சியை யாரும் அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வழக்கறிஞர் பாலு 2 கட்சிகள் மாறி பிழைப்பு தேடி பாமகவிற்கு வந்தவர் எனவும் சாடியுள்ளார்.