News April 16, 2024
UPSC தேர்வில் தேர்ச்சி.. முதல்வர் வாழ்த்து

UPSC சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் இருந்து தேர்வானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நாட்டிற்கு சேவை செய்யும் பயணத்தை தொடங்கியுள்ளவர்களை வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நேர்மையான மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Similar News
News February 7, 2026
அக்னி 3 சோதனை வெற்றி.. இந்தியா சாதனை

ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் அக்னி 3 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சுமார் 3,500 கி.மீ தொலை தூர இலக்குகளையும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. இது இந்திய வான்வழி பாதுகாப்புக்கு கூடுதல் வலிமை சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. இதற்கு ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
News February 7, 2026
பிப்ரவரி 7: வரலாற்றில் இன்று

*1864-மறைந்த மெட்ராஸ் மாகாண நீதிபதி சிவசுவாமி பிறந்தநாள் *1902–தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பிறந்தநாள் *1979–நெப்டியூனின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது புளூட்டோ *1986–அரசியல்வாதி ஏ.ஜி.சுப்புராமன் நினைவு நாள் *1992–ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் கையெழுத்து *2001–எழுத்தாளர் பகீரதன் நினைவு நாள் *2008–நடிகர் குணால் நினைவு நாள்
News February 7, 2026
பள்ளிக் காதலை நினைவூட்டும் With Love

திருமணத்திற்கு தயாராகும் அபிஷன், அனஸ்வரா தங்களது முதல் காதலை உரியவர்களிடம் சொல்லிவிட்டு வாழ்க்கையை தொடங்க திட்டமிடுகின்றனர். இந்த பயணத்தில் இருவரும் உணர்ந்துகொள்ளும் விஷயங்களே With Love.
பிளஸ்: அறிமுக படத்திலேயே அபிஷன் கலக்கல், கலகலப்பான 2-ம் பாதி, நாஸ்டால்ஜிக் பள்ளிக் காதல், ஷான் ரோல்டனின் பாடல்கள் பல்ப்ஸ்: ஸ்லோவான முதல் பாதி, பழகிப்போன காதல் காட்சிகள், யூகிக்கக்கூடிய கதைக்களம் Rating: 2.5/5


