News October 16, 2025

விழுப்புரம்: மீன் பாசி குத்தகை பற்றிய அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் பொன்பத்தி ஏரி இருக்கிறது, இங்குள்ள மின்னணு ஒப்பந்தபுள்ளி மூலம் மீன் பாசி குத்தகை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் மின்னணு ஒப்பந்த புள்ளி மூலம் 3 ஆண்டுகளுக்கு மீன் பாசி குத்தகை விடப்பட உள்ளன.மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News

News October 16, 2025

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் <>பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்<<>>. மேலும் விபரங்களுக்கு 9080515682 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

வேலூர்: குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

image

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரை விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News October 16, 2025

விழுப்புரம் எம்.பி வைத்த கோரிக்கை!

image

விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த குரல் கொடுப்பதாக எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!