News October 16, 2025

விஜய்யை அட்டாக் செய்யும் CM; பின்னணி இதுவா?

image

கரூர் துயரத்திற்கு விஜய்யை நேரடியாக குறிப்பிடாத CM தற்போது, இதற்கு காரணம் TVK-ன் <<18010842>>காலதாமதம்தான்<<>> என பேசியுள்ளார். இந்த திடீர் ரியாக்‌ஷனுக்கு திமுகவின் சர்வேதான் காரணம் என்கின்றனர். சர்வேயில் NDA கூட்டணிக்கு விஜய் சென்றால் <<18018325>>திமுக வெற்றி உறுதி<<>> என தெரியவந்துள்ளது. இதனால், தொடர்ந்து அட்டாக் செய்தால், விஜய் NDA பக்கம் சாய்வார் என அறிவாலயம் கணக்கு போட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Similar News

News October 16, 2025

BREAKING தூத்துக்குடிக்கு வானிலை மையம் எச்சரிக்கை

image

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

News October 16, 2025

இலங்கை பிரதமரிடம் பேசுங்கள்: PM-க்கு CM கடிதம்

image

இந்தியா வந்துள்ள இலங்கை PM ஹரிணி அமரசூர்யாவிடம், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பேச வேண்டும் என்று, PM மோடியிடம் CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்களை தடுத்தல் தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

News October 16, 2025

தீபாவளி ஸ்பெஷல் வண்ணக் கோலங்கள்!

image

தீபாவளிக்கு வீட்டு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… SWIPE செய்து பாருங்க…

error: Content is protected !!