News October 16, 2025
கரூர்: விபத்தில் ஜோதிடர் பலி!

கரூர்: தோகைமலை அருகே உள்ள ஆத்துப்பட்டியைச் சேர்ந்தவர் அண்ணாவி(70). கிளி ஜோதிடரான இவர் நேற்று முந்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் பாளையம் – தோகைமலை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக திருப்பதி என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தவர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 16, 2025
கரூர்: இருசக்கர வாகனம் மோதியதில் கவலைக்கிடம்!

கரூர் வள்ளுவர் ஓட்டல் அருகே மணியம்மாள் (60) என்பவர் சாலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் ஷாஜகான் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், மணியம்மாள் என்பவர் மீது மோதியதில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் நேற்று ஷாஜகான் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News October 16, 2025
கரூர்: கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி!

கரூர் டு சின்ன தாராபுரம் சாலையில் அருக்காணி (85) என்ற முதியவர் சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் படராம் ஓட்டி வந்த நான்கு சக்கர வாகனம் அருக்காணியின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் நேற்று படராம் மீது வழக்கு பதிவு செய்தனர்.
News October 16, 2025
ஜாமீனில் வெளியே வந்த கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள்!

கரூரில் கடந்த செப்.27 அன்று நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் பலியான நிலையில், கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் இன்று (அக்.16) திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர். மேலும் ஜாமீனில் வெளி வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் வரவேற்று கரூருக்கு அழைத்துச் சென்றனர்.