News October 16, 2025
விருதுநகர்: ATM செல்பவர்கள் உஷார்

வத்ராப் கே.புதூரை சேர்ந்த அருண்குமார் நேற்று ஸ்ரீவி ATM மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞர் கார்டு ரிவர்ஸ் ஆகிறது என்று கூறி அருண்குமாரின் கார்டை மாற்றி அதில் ரூ.40,000 எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதே போல் காரியாபட்டி பகுதிகளிலும் ATM கார்டை மாற்றி கொடுத்து பணத்தை மர்ம நபர் திருடி வரும் நிலையில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். SHARE IT
Similar News
News October 16, 2025
BREAKING விருதுநகருக்கு வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
News October 16, 2025
விருதுநகர்: மழை காலத்தில் கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

விருதுநகர் மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.
News October 16, 2025
சதுரகிரிக்கு வருகிற அமாவாசை நாட்களில் செல்ல தடை

சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஐப்பசி மாதம் சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு 17 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு மலையேறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.