News October 16, 2025
நீலகிரியில் அதிரடி கைது!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கட்டப்பட்டு வனச்சரகம், தீனட்டி செல்லும் சாலையின் அருகே உள்ள எஸ்டேட்டுக்கு சொந்தமான இடத்தில், சோலார் மின்வேலி கம்பியில் கரடி ஒன்று சிக்கி இறந்ததாக, வனத்துறைக்கு தகவல் வந்தது. உடல் உறுப்பு மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. அதன் பின் கரடி உடல் எரியூட்டப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணைக்கு பின், கரடிக்கு சுருக்கு வைத்த, விக்ரம்குமார் என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 10, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி ஆட்சியரின் செய்தி குறிப்பில் திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்கள் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ மாணவியருக்கு 15,000 பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு வரும் 26 ஆம் தேதி அன்று திருக்குறள் முற்றோதல் போட்டி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது என்றார்.
News November 10, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 10, 2025
நீலகிரி: 12-ம் வகுப்பு படித்திருந்தால் SUPER வாய்ப்பு!

நீலகிரி மக்களே, ஹோமியோபதி ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சிலில் உள்ள குரூப் ஏ, பி (ம) சி பிரிவில் உள்ள பணி வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.1,77 லட்சம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://eapplynow.com/ இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். நவ.26-ம் தேதி கடைசி ஆகும். SHARE பண்ணுங்க!


