News October 16, 2025
ALERT: செங்கல்பட்டில் கனமழை பெய்யும்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News October 16, 2025
செங்கல்பட்டு: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

செங்கல்பட்டு மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம்.
News October 16, 2025
செங்கை: G Pay / PhonePe / Paytm பயனாளர்கள் கவனத்திற்கு!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News October 16, 2025
செங்கல்பட்டு: ரோடு சரியில்லையா? இதோ தீர்வு!

செங்கல்பட்டு மக்களே உங்கள் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் காட்சியளிக்கிறதா? அதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இப்போதே உங்கள் போனில் தமிழக அரசின் ‘நம்ம சாலை’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் புகாரை புகைப்படத்துடன் பதிவிட்டால் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சூப்பரான தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.