News October 16, 2025
வாட்ச் விலை இத்தனை கோடியா!

நேரம் மட்டுமே பார்ப்பதற்கென்று இருந்த வாட்ச் தற்போது இதய துடிப்பு வரையிலும் கணக்கிடுகிறது. அத்தியாவசிய பொருளாக தொடங்கிய அதன் பயணம், தற்போது அழகு மற்றும் ஆடம்பரத்திற்கான இடத்தை அடைந்துள்ளது. அந்த வகையில், உலகில் மிகவும் விலை உயர்ந்த வாட்ச்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். வாயை பிளக்க வைக்கும் அதன் விலையை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Similar News
News October 16, 2025
இந்த வார OTT ரிலீஸ்.. ரெடியா மக்களே!

தீபாவளி & வார விடுமுறையை கொண்டாட, அரை டஜன் படங்கள் OTT-ல் வெளியாகவுள்ளன *தண்டகாரண்யம்(தமிழ்) & மாயபுத்தகம்(தமிழ்)- Simply South *தணல்(தமிழ்)- அமேசான் ப்ரைம் *முதல் பக்கம்(தமிழ்)- ஆஹா *Final Destination(ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் *கிஷ்கிந்தபுரி(தெலுங்கு)- Zee5 *மிராஜ்(மலையாளம்)- Sony Liv *We live in time(ஆங்கிலம்)- Lionsgate play. மேலும், தமிழில் தீபாவளி ட்ரீட்டாக 3 படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆகின்றன.
News October 16, 2025
BREAKING: மகளிர் உரிமை தொகை.. புதிய அறிவிப்பு

சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் தொகை குறித்து முக்கிய அறிவிப்பை உதயநிதி வெளியிட்டுள்ளார். 1.14 கோடி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத் தொகை திட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், டிச.15-ம் தேதி முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும் உதயநிதி அறிவித்துள்ளார்.
News October 16, 2025
ஜெய்சங்கர் உடன் இலங்கை PM சந்திப்பு

இலங்கை PM ஹரினி அமரசூரிய, 3 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், EAM ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளிடையேயான கல்வி & திறன் மேம்பாட்டில் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து IIT டெல்லி & நிதி ஆயோக் செல்லும் அவர், அங்கு கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் ஆராயவுள்ளார்.