News October 16, 2025
Business Roundup: நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு

*இந்த வாரத்தின் முதல் 2 நாள்கள் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள், நேற்று ஏற்றம் கண்டன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 74 காசுகள் உயர்ந்து ₹88.06 ஆனது. *நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ₹3.20 லட்சம் கோடி, இறக்குமதி ₹6.03 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. *மாதம் 12 லட்சம் ஜோடி சாக்ஸ் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி. *சென்னையில் வீடு விற்பனை 2 மடங்காக உயர்வு.
Similar News
News October 16, 2025
10-ம் வகுப்பு தகுதியில் ராணுவத்தில் வேலைவாய்ப்பு

ராணுவ தள பணிமனைகளில் வெல்டர், கிளார்க், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஸ்டோர் கீப்பர், ஃபிட்டர் உள்ளிட்ட 194 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ 12th/ ITI. வயது வரம்பு: 18 – 25. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, உடற்தகுதி. சம்பளம்: ₹5,200 – ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News October 16, 2025
ராமதாஸ் Health பற்றி பொய் சொன்னாரா அன்புமணி?

ஐசியுவில் நான் வைக்கப்படவில்லை என ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, அப்போலோவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஐசியுவில் இருப்பதால் அவரை பார்க்கமுடியவில்லை என <<17926915>>அன்புமணி பேட்டியளித்திருந்தார்<<>>. இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்த அவர், இனி தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News October 16, 2025
நகை கடன்… மக்களுக்கு GOOD NEWS

கூட்டுறவு வங்கிகளில் கொடுக்கப்படும் நகைக்கடன் தொகை உயர்ந்துள்ளது. இதுவரை 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், அடுத்த வாரத்திலிருந்து ₹7,000 வரை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது நகை கடனுக்கான இந்த அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. SHARE.