News October 16, 2025
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 68% அதிகரிப்பு

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 68% அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையில் பதிவான வழக்குகளின் படி, கடந்த 2019-ல் பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் 1,175-ஆக இருந்த நிலையில், 2023-ல் அது 1,969-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 6,500-க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆரம்ப கட்ட விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News October 16, 2025
இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா அனிருத்?

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், U1, ஹாரிஸ் என பெரும் ஜாம்பவான்கள் கட்டி ஆண்ட மியூசிக் இண்டஸ்ட்ரியில் தற்போது அனிருத் ஆதிக்கம் செலுத்த தொடங்கியிருக்கிறார். பெரிய ஸ்டார்களின் படங்கள், கான்செர்ட், ஹோட்டல் தொழில் என பல வகையிலும் வருமானம் ஈட்டி வருகிறார் அனிருத். இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு ₹70 கோடி வரை இருக்கும் என தகவல் கசிந்துள்ளது. உங்களுக்கு பிடித்த அனிருத் பாடல் என்ன?
News October 16, 2025
பயணத்தின்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

நாம் வாழும் வழக்கமான சூழலில் இருந்து சற்று மாற்றாக, மனதிற்கு இதமான பல்வேறு அனுபவங்களை கொடுக்க கூடியது பயணம். இந்த பயணத்தை நினைத்தபடியே முழுமையாக அனுபவிப்பவர்கள் வெகு சிலரே. ஏனென்றால், சூழலியல் பிரச்னைகள், உடல் உபாதைகள் காரணமாக பயணம் மனதை மாற்றிவிடும். எனவே, நீண்ட தூர பயணத்தில் நாம் தவிர்க்க வேண்டிய உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
விராட் கோலியின் இன்றைய மாஸ் தத்துவம்

ஆஸி.,க்கு எதிரான ODI தொடரில் விளையாடுவதற்காக விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் சிட்னி சென்றுள்ளனர். இந்நிலையில், கோலி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் உண்மையிலேயே தோல்வியடைவது என்பது, முயற்சியை கைவிடும்போது தான்’ என தெரிவித்துள்ளார். ODI தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகும் நிலையில், ஆஸி.,-ல் இருந்தவாறே கோலி இவ்வாறு பதிவிட்டது பேசுபொருளாகியுள்ளது.