News October 16, 2025
பல ரவுடிகளை பார்த்தவன்: அண்ணாமலை

சாமானிய மனிதனை திருமாவளவன் சென்ற கார் இடித்து தள்ளியதை பற்றி கேட்டால் மிரட்டுவதா என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுபோன்ற வெறுப்பு அரசியல், மிரட்டுவதை விட்டுவிட்டு நாகரிகமான அரசியலுக்கு திருமாவளவன் முன் வர வேண்டும் எனவும், வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம் என்றும் அவர் வினவியுள்ளார். மேலும், போலீசாக பல ரவுடிகளை டீல் செய்த தன்னிடம், இந்த வேலையெல்லாம் பலிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 16, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள 8 பேரின் ஜாமின் மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சிறையில் உள்ள ராஜேஷ், விஜய், செந்தில் குமார் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
News October 16, 2025
கிட்னி திருட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை: மா.சு.

கிட்னி திருட்டு புகார்களில் வழக்குப்பதிவு செய்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார். பேரவையில் EPS குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர், ஹாஸ்பிடல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். திருச்சி சிதார், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஹாஸ்பிடல்களில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News October 16, 2025
மலேசியாவில் மர்ம காய்ச்சல்: மீண்டும் Pandemic?

மலேசியாவில் 6,000 மாணவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் Pandemic அச்சம் எழுந்துள்ளது. இதனிடையே மலேசியாவில் XFG என்ற புதிய வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது கூடுதல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மலேசியா முழுவதும் பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.