News October 16, 2025
3 ஆண்டு தலைமறைவுக்கு பின் நடிகை ஆஜர்

பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை <<17374196>>மீரா மிதுன்<<>> நேற்று சென்னை கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு தொடர் மனநல சிகிச்சை தேவைப்படுவதாக அரசு வக்கில் தெரிவிக்க, பிடிவாரன்ட் திரும்ப பெறப்பட்டு, விசாரணை நவ.6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த நடிகையின் மனநலம் பாதித்து டெல்லியில் இருப்பதாக அவரது தாயார் கூற, சமீபத்தில் போலீசார் அவரை பிடித்தனர்.
Similar News
News October 16, 2025
காலமானார் யோகலட்சுமி .. ஸ்டாலின் நேரில் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மனைவி யோகலட்சுமி காலமானார். கடந்த சில நாளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. தேனாம்பேட்டை இல்லத்தில் உள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மூத்த அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
News October 16, 2025
சட்டப்பேரவையில் எதிரொலித்த ‘கிட்னி திருட்டு’

சட்டப்பேரவையில் ‘கிட்னி திருட்டு’ விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை இபிஎஸ் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடிய ஹாஸ்பிடல் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிட்னி மட்டுமின்றி கல்லீரலும் திருடப்பட்டுள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
News October 16, 2025
இந்த வடிவங்களின் செய்தி தெரியுமா?

டிராபிக் போர்டின் வடிவம் சொல்லும் செய்தி தெரியுமா? பொதுவாக இந்திய சாலைகளில் 3 வடிவிலான டிராபிக் போர்டுகள் உள்ளன ★சிவப்பு வட்டம்: இது உத்தரவு சின்னம். கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் ★சிவப்பு முக்கோணம்: இது எச்சரிக்கை சின்னம். பள்ளம் இருப்பது, ரயில் தண்டவாளம் உள்ளது போன்ற எச்சரிக்கைகளை கொடுக்கும் ★நீலம் அல்லது பச்சை நிற செவ்வகம்: இது தகவல் அளிக்கும் போர்டு. SHARE IT.