News October 16, 2025
அக்டோபர் 16: வரலாற்றில் இன்று

*உலக உணவு நாள். *1799 – பாளையக்காரர் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். *1905 – ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வங்காளத்தை 2-ஆக பிரித்தனர். *1919 – ஹிட்லர் முதல்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். *1948 – நடிகை ஹேம மாலினி பிறந்தநாள். *1949 – நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் பிறந்தநாள். *1963 – கடற்புலிகளின் தலைவர் சூசை பிறந்தநாள். *1990 – அனிருத் பிறந்தநாள்.
Similar News
News October 16, 2025
விஜய் கட்சிக்கு தலித்துகள் சென்றால்.. திருமாவளவன்

விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் பெருமளவு தவெகவிற்கு சென்று விடுவார்கள் என சோசியல் மீடியாக்களில் பேசியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால், அவ்வாறு சென்றால், அவர்கள் விசிகவில் இருக்க தகுதியில்லாதவர்கள் என்றும், கொள்கையற்ற பதர்கள் எனவும் விமர்சித்துள்ளார். தன்னால் நீக்கப்பட்ட சிலரும் BJP-யில் இணைந்து தற்போது சங்கிகளாக மாறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
News October 16, 2025
BREAKING: இன்று ஒரே நாளில் விலை ₹1000 குறைந்தது

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய வெள்ளி விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹206-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹2,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மூன்று 3 நாள்களில் வெள்ளி விலை ₹17 ஆயிரம் உயர்ந்த நிலையில், இன்று வெறும் ₹1000 குறைந்துள்ளது.
News October 16, 2025
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறதா இந்தியா?

ரஷ்யாவிடம் இருந்து இனி கச்சா எண்ணெய் வாங்க மாட்டோம் என PM மோடி உறுதியளித்ததாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மாஸ்கோவை பொருளாதார ரீதியாக தாக்கும் முயற்சிகளில் இது ஒரு பெரிய அடி என கூறிய அவர், அடுத்ததாக சீனாவையும் இதையே செய்ய வைக்கப் போகிறேன் என சவால் விடுத்துள்ளார். டிரம்ப்பின் இந்த கூற்றுக்கு இந்தியா இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.