News October 16, 2025
டாப் ரேங்கில் வந்த ஆப்கன் வீரர்கள்

ICC தரவரிசையில் ஆப்கன் வீரர்கள் வலிமையை நிரூபித்துள்ளனர். *NO. 1 ODI பவுலர் – ரஷித் கான். *NO. 1 ஆல்ரவுண்டர் – அஸமதுல்லா. *NO. 2 ODI பேட்ஸ்மேன் – இப்ராஹிம் சரத்ரன். அதேபோல் இந்திய வீரர்களும் தங்களது தரவரிசையில் முன்னிலையில் உள்ளனர். *NO. 1 ODI பேட்ஸ்மேன் – சுப்மன் கில். *NO. 1 டி20 பேட்ஸ்மேன் – அபிஷேக் ஷர்மா. *NO. 1 டெஸ்ட் பவுலர் – பும்ரா. *NO. 1 டி20 பவுலர் – வருண் சக்ரவர்த்தி.
Similar News
News October 16, 2025
முன்னாள் ராணுவ வீரர்களின் பெண் திருமணத்திற்கு ₹1,00,000!

பென்ஷன் பெற தகுதியில்லாத முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மானியத்தை 100% அதிகரிக்க மத்திய பாதுகாப்புத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, மாதாந்திர மானியம் ₹4,000-ல் இருந்து ₹8,000-மாகவும், கல்வி மானியம் ₹1,000-ல் இருந்து ₹2,000-மாகவும், திருமண மானியம் ₹50,000-ல் இருந்து ₹1,00,000-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்விதிகள் வரும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
News October 16, 2025
மூட்டு வலியை விரட்டும் கசாயம்!

கை, கால், கழுத்து & மூட்டு வலி நீங்க சித்தரத்தை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை செய்ய, சித்தரத்தை சூரணம்- அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம்- அரை தேக்கரண்டி, சுக்கு பொடி- அரை தேக்கரண்டி தேவை. இவை மூன்றையும் 200மிலி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இந்த பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.
News October 16, 2025
திமுகவுக்கு போட்டியாக மாறும் தவெக?

கரூர் துயரத்துக்கு பின் மக்கள் மத்தியில் தவெகவுக்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள திமுக ரகசிய சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த சர்வேயில், வரும் தேர்தலில் விஜய் தனித்து போட்டியிட்டால் 23% வாக்குகளை பெறுவார் என தெரியவந்துள்ளதாம். அத்துடன், 2029, 2031 தேர்தல்களில் திமுகவுக்கு பெரும் போட்டியாளராக விஜய்யின் தவெக உருவெடுக்கும் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.