News October 16, 2025
World Roundup: இந்தியாவுக்கு வரும் இலங்கை PM

*இலங்கை PM ஹரிணி அமரசூர்யா நாளை இந்தியா வருகிறார். *இந்தோனேஷிய கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. *ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா மீது டிரம்ப் 500% வரி விதிக்கவுள்ளதாக தகவல். *காஸா மக்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஹமாஸுக்கு அமெரிக்க ராணுவம் அறிவுறுத்தல். *போதைப் பொருள் கடத்திய வெனிசூலா படகு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு.
Similar News
News October 16, 2025
விஜய் இந்த முடிவு எடுத்தால் சீமானுக்கு லாபம்

திமுக நடத்திய ரகசிய சர்வேயில் சுவாரஸ்யமான தகவல் இடம்பெற்றுள்ளது. அதாவது விஜய்யின் தவெக NDA கூட்டணிக்கு சென்றால், சீமானுக்கு மிகப்பெரிய லாபம் என தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் சீமான் 8% வாக்குகள் பெற்றதால், NTK அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. இந்நிலையில், 2026-ல் NDA கூட்டணியில் விஜய் இணைந்தால், சீமானின் NTK வாக்கு வங்கி 8%லிருந்து 12%ஆக அதிகரிக்குமாம்.
News October 16, 2025
MLA சீட் கொடுத்தாலும் வேண்டாம்: மாரி செல்வராஜ்

அரசியலுக்கு வருவதில் தனக்கு விருப்பமில்லை என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த குறைந்தபட்சம் 15 கதைகளை படமாக்க விரும்புவதாக கூறிய அவர், வரும் தேர்தலில் MLA சீட் கொடுத்தாலும் வேண்டாம் என்றார். அதேநேரம், பா.ரஞ்சித் அரசியலுக்கு வருவார் என்றும், அவர் எதையும் தைரியத்துடன் செய்யக் கூடியவர் என்றும் மாரி கூறியுள்ளார்.
News October 16, 2025
உடல் ஃபிட்டாக இருக்க காலையில் இத பண்ணுங்க!

ஃபிட்டாக இருக்கணும் என அனைவருக்கும் ஆசை உண்டு. ஆனால், சோம்பல் பலரையும் அதனை அடையவிடாமல் தடுக்கிறது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க, ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. வீட்டிலேயே புஷ் அப் பண்ணுங்க. உடலை வலுவாக வைத்திருக்க உதவும் பெஸ்ட் உடற்பயிற்சி இதுதான். புஷ் அப் செய்வதால் கை தசைகள், கீழ்ப்புற உடல் வலுப்படுகிறது. முதலில் எவ்வளவு முடியுமோ அதுவரை பண்ணுங்க. போக போக எண்ணிக்கையை கூட்டுங்க.