News October 16, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News October 16, 2025
உறுதியானதா அதிமுக – தவெக கூட்டணி பேச்சு

கரூர் விவகாரத்தை அதிமுக கூட்டணிக்காக பயன்படுத்துகிறது என பேரவையில், CM ஸ்டாலின் பேசியது அரசியல் களத்தை தீவிரமாக்கியுள்ளது. கூட்டணிக்காக அல்ல; தமிழக மக்கள் என்பதால் பேசுகிறோம் என EPS பதிலடி கொடுத்தார். ஆனால், CM ஸ்டாலினே, அதுவும் பேரவையில் இந்த விவகாரத்தைப் பேசியதால், ADMK – TVK இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சு நடப்பதை உறுதி செய்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News October 16, 2025
Business Roundup: நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு

*இந்த வாரத்தின் முதல் 2 நாள்கள் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள், நேற்று ஏற்றம் கண்டன. *அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று 74 காசுகள் உயர்ந்து ₹88.06 ஆனது. *நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ₹3.20 லட்சம் கோடி, இறக்குமதி ₹6.03 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது. *மாதம் 12 லட்சம் ஜோடி சாக்ஸ் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி. *சென்னையில் வீடு விற்பனை 2 மடங்காக உயர்வு.
News October 16, 2025
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 68% அதிகரிப்பு

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 68% அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. காவல்துறையில் பதிவான வழக்குகளின் படி, கடந்த 2019-ல் பட்டியலினத்தவருக்கு எதிரான குற்றங்கள் 1,175-ஆக இருந்த நிலையில், 2023-ல் அது 1,969-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 6,500-க்கும் மேற்பட்ட வழக்குகள், ஆரம்ப கட்ட விசாரணையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.