News October 16, 2025
SPAM கால் தொல்லையா? இதை உடனே பண்ணுங்க

கடந்த சில ஆண்டுகளில் SPAM கால் வருவது அதிகரித்துள்ளது. கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் தருவதாகக் கூறி மீண்டும் மீண்டும் அழைப்புகள் வருவது பலரையும் எரிச்சலடைய செய்கிறது. இதற்காக TRAI ஏற்கனவே DND என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. 1909 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது SMS செய்வதன் மூலமோ டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளைத் தடுக்கலாம். DND செயலி மூலம் TRAI-க்கு நேரடியாகப் புகார் செய்யலாம்.
Similar News
News October 16, 2025
பிஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு செக் வைத்த பாஜக

பிஹாரில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ரகோபூர் தொகுதியில் சதிஷ்குமார் யாதவ் என்பவரை பாஜக களமிறக்கியுள்ளது. கடந்த 2010 தேர்தலில் முன்னாள் முதல்வரும், தேஜஸ்வி யாதவ்வின் தாயாருமான ராப்ரி தேவியை இதே தொகுதியில் வைத்து, JDU சார்பில் போட்டியிட்டு தோற்கடித்தவர் தான் சதிஷ்குமார். இதனால், அந்த நட்சத்திர அந்தஸ்து பெற்ற தொகுதியில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 16, 2025
அக்டோபர் 16: வரலாற்றில் இன்று

*உலக உணவு நாள். *1799 – பாளையக்காரர் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். *1905 – ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வங்காளத்தை 2-ஆக பிரித்தனர். *1919 – ஹிட்லர் முதல்முறையாக பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். *1948 – நடிகை ஹேம மாலினி பிறந்தநாள். *1949 – நடிகரும் நாடக ஆசிரியருமான கிரேஸி மோகன் பிறந்தநாள். *1963 – கடற்புலிகளின் தலைவர் சூசை பிறந்தநாள். *1990 – அனிருத் பிறந்தநாள்.
News October 16, 2025
சொந்த பணத்தை எடுக்க 3 ஆண்டுகள் காத்திருப்பா?

<<18018181>>EPFO<<>> புதிய விதிகளை திரும்ப பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. ஓய்வு பெறும் நேரத்தில் கூட சொந்த பணத்தை எடுக்க 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், மிடில் கிளாஸ் மக்களின் பணத்தை நிறுத்தி, தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடனை தள்ளுபடி செய்வதா எனவும் சாடியுள்ளன. ஆனால், ஊழியர்களின் சமூக பாதுகாப்பு நலன்களுக்காகவே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.