News October 15, 2025
நடிகை மதுமதி காலமானார்

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை மதுமதி(87) காலமானார். சிறந்த நடிப்பாலும், அசாத்திய நடனத்தாலும் அன்றைய ரசிகர்களை கட்டிப் போட்டவர் மதுமதி. Ankhen, Mujhe Jeene Do, Shikari ஆகியவை இவரின் முக்கிய படங்களில் சில. ‘என் முதல் குருவே இவர் தான். எனக்கு தெரிந்த நடனம் எல்லாமே அவரிடம் கற்றதுதான்’ என்று நடிகர் அக்ஷய் குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
National Roundup: 101 பாஜக வேட்பாளர்களும் அறிவிப்பு

*பிஹார் தேர்தலில் பாஜக போட்டியிடும் 101 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. *மனைவியை மயக்க மருந்து செலுத்தி கொலை செய்து, இயற்கை மரணம் என நாடகமாடிய பெங்களூரு டாக்டர் கைது. *ம.பி.யில் பினாயில் குடித்த 25 திருநங்கைகள் ஹாஸ்பிடலில் அனுமதி. *பிஹாரில் எத்தனை இடங்களில் போட்டி என்பதை அறிவிக்காமல், சில வேட்பாளர்களை மட்டும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
News October 16, 2025
கர்ப்பம் ஒரு சாக்குபோக்கு: MLA பேச்சால் சர்ச்சை

கர்நாடக காங்., MLA சிவகங்கா பசவராஜ், பெண்கள் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமாக இருக்கும் வனத்துறை அதிகாரி ஸ்வேதா அலுவல் கூட்டம் நடைபெறும் அன்று விடுப்பு எடுத்துள்ளார். இதில் பொறுமை இழந்த MLA , சம்பளம் வேண்டும் என்பதற்காக வேலைக்கு வந்துவிட்டு, முக்கியமான நாளில் கர்ப்பமாக இருப்பதை சாக்காக வைத்து, லீவ் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 16, 2025
கலீல் ஜிப்ரான் பொன்மொழிகள்

*பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. *எல்லோராலும் கேட்க முடியும், ஆனால் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். *அவன் தேடும் வாழ்க்கை அவனுக்குள் இருக்கிறது என்பதை அறியாமல். மனிதன் தனக்கு வெளியே வாழ்க்கையை கண்டுபிடிக்க போராடுகிறான். *ஒரு மனிதனின் உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகளாகும். *நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு.