News October 15, 2025
அமேசானில் 15% ஊழியர்களை நீக்க முடிவு

அமேசான் நிறுவனம் HR பிரிவில் இருந்து 15% ஊழியர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு சில துறைகளை சார்ந்த ஊழியர்களை நீக்கவும் அமேசான் ஆலோசிக்கிறதாம். அந்நிறுவனம் AI மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்களில் ₹8,300 கோடி வரை முதலீடு செய்துள்ள நிலையில் இந்த வேலை நீக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. AI ஆதிக்கத்தால் சமீபத்தில் IBM நிறுவனத்தில் இருந்து 8,000 HR-கள் நீக்கப்பட்டிருந்தனர்.
Similar News
News October 16, 2025
கர்ப்பம் ஒரு சாக்குபோக்கு: MLA பேச்சால் சர்ச்சை

கர்நாடக காங்., MLA சிவகங்கா பசவராஜ், பெண்கள் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பமாக இருக்கும் வனத்துறை அதிகாரி ஸ்வேதா அலுவல் கூட்டம் நடைபெறும் அன்று விடுப்பு எடுத்துள்ளார். இதில் பொறுமை இழந்த MLA , சம்பளம் வேண்டும் என்பதற்காக வேலைக்கு வந்துவிட்டு, முக்கியமான நாளில் கர்ப்பமாக இருப்பதை சாக்காக வைத்து, லீவ் கேட்பதற்கு வெட்கப்பட வேண்டும் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News October 16, 2025
கலீல் ஜிப்ரான் பொன்மொழிகள்

*பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது. *எல்லோராலும் கேட்க முடியும், ஆனால் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். *அவன் தேடும் வாழ்க்கை அவனுக்குள் இருக்கிறது என்பதை அறியாமல். மனிதன் தனக்கு வெளியே வாழ்க்கையை கண்டுபிடிக்க போராடுகிறான். *ஒரு மனிதனின் உண்மையான செல்வம் இந்த உலகில் அவன் செய்யும் நன்மைகளாகும். *நேற்று என்பது இன்றைய நினைவு, நாளை என்பது இன்றைய கனவு.
News October 16, 2025
லதா ரஜினிகாந்த் மீது பிடியை இறுக்கும் கோர்ட்

‘கோச்சடையான்’ படம் தொடர்பாக லதா ரஜினிகாந்த் மீதான நிதி மோசடி வழக்கை பெங்களூரு கோர்ட் மீண்டும் தொடங்கியுள்ளது. வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற அவரின் மனுவை நிராகரித்த கோர்ட், வழக்கை தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ‘கோச்சடையான்’ படத்திற்கு வாங்கிய பணத்தை கொடுக்காமல், போலி ஆவணங்கள் தயாரித்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு நடந்து வருகிறது.