News October 15, 2025

பள்ளியில் மரக்கன்று நடவு செய்த ஆட்சியர் சந்திரகலா

image

இராணிப்பேட்டை ஆட்சியர் சந்திரகலா இன்று (அக்.15) காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கர்ணாவூர் ஊராட்சி வேடந்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவியர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நட்டார்கள். உடன் வருவாய் கோட்டாட்சியர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா (பொறுப்பு), மாவட்ட கல்வி அலுவலர் கிளாடி சுகுணா, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம் கலந்து கொண்டனர்.

Similar News

News October 16, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அக்.16 இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 15, 2025

கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

image

ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., இன்று (அக்.15) கோடம்பாக்கம் ஊராட்சியிலுள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். இச்சங்கத்தில் வழங்கப்பட்ட விவசாய கடன், நகை கடன், தனிநபர் கடன் குறித்த பதிவேடுகளையும், கடன் வசூலிக்கப்பட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

News October 15, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை நிலவரம்

image

இன்று (அக் -15) ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 172.2மி.மீ மழை பதிவாகியுள்ளது இதில் அதிகபட்சமாக வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் 43.4மி.மீ மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் சராசரியாக 16.11மி. மீ மழை பதிவாகியுள்ளது என்று ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் செய்தியை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!