News October 15, 2025

துணை முதல்வர் நாளை தொடங்கி வைக்கும் முக்கிய நிகழ்ச்சி

image

விஜயா பதியில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் கட்டுமானப் பணிகளை நாளை (அக்.16) காலை 11:00 மணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். அதனைத்தொடர்ந்து ராதாபுரம் ஆனந்தம் மஹாலில் நடைபெறும் காணொலி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Similar News

News October 16, 2025

தீபாவளி நேரங்களில் இதனை செய்யாதீர்கள் – நெல்லை காவல்

image

தீபாவளி பண்டிகை வருகிற திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இத்த நிலையில் பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகள் மற்றும் பிற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பேருந்துகள், ரெயில்களில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

News October 16, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.15] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News October 15, 2025

திருநெல்வேலியில் தீபாவளியன்று மழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலியில் அக்.17,18,20ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!