News October 15, 2025

₹2,000 உதவித்தொகை.. வந்தது முக்கிய அப்டேட்!

image

PM Kisan திட்டத்தில் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் தான் உதவித்தொகை பெற முடியும் என்ற விதிக்கு மாறாக, 31 லட்சம் பேர் முறைகேடாக பணம் பெற்று வருவதாகவும், அவர்களை நீக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 21-வது தவணைக்கான ₹2,000 தீபாவளிக்கு முன்பாகவே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News October 17, 2025

தமிழ் தாய் ஈன்றெடுத்த பிள்ளை கன்னடம்: வைரமுத்து

image

‘தமிழ்’ என்கிற தாய், தனது வயிற்றிலிருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு ஆகிய பிள்ளைகளை ஈன்றெடுத்து, செம்மொழி என்ற தகுதியை பெற்றது என்று வைரமுத்து கூறியுள்ளார். தாய்மொழி என்பது கண்கள் என்றும், பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றவை எனவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில், ‘தக் லைஃப்’ பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்’ என கூறியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

News October 17, 2025

அடுத்த 2 ஆண்டுகளில் வெள்ளியின் விலை இவ்வளவா!

image

தற்போதைய விலை உயர்வை பார்க்கும்போது இனி வெள்ளிதான் அடுத்த தங்கம் என Experts சொல்கின்றனர். இதற்கு, சர்வதேச வங்கிகள் வெள்ளியை சேமித்து வைப்பதுதான் காரணம் என கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, 1 கிலோ வெள்ளியின் விலை ₹2 லட்சத்தை தாண்டியது. 2 ஆண்டுகள் கழித்து இதன் விலை ₹3 லட்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தங்கத்தில் 75%, வெள்ளியில் 25% என முதலீடு செய்ய பழகுங்கள் மக்களே! SHARE.

News October 17, 2025

குஜராத் அமைச்சரவை மாற்றம்.. புதிய பட்டியல் வெளியானது

image

CM பூபேந்திர படேலை தவிர குஜராத் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 16 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில், விரிவாக்கப்பட்ட அமைச்சரவை பட்டியலுடன், அம்மாநில கவர்னர் ஆச்சார்யா தேவ்ராத்தை CM சந்தித்தார். இந்நிலையில், 26 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, ருஷிகேஷ் படேல் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

error: Content is protected !!