News October 15, 2025
கரூர் துயரத்திலும் திமுக அரசியல் செய்கிறது: EPS

கரூர் துயரத்தையொட்டி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதனை பார்த்த சபாநாயகர் என்ன ரத்த கொதிப்பா என கேட்டதற்கு, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம் என பதிலடியும் கொடுத்துள்ளார். துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News October 16, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 16, புரட்டாசி 30 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM -12:00 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶சிறப்பு: அஹோபிலமடம் 18-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம், குரு வழிபாட்டு நாள். ▶வழிபாடு: தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி வழிபடுதல்.
News October 16, 2025
Meta AI-ன் குரலாக மாறிய தீபிகா

ஃபேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான Meta, தீபிகா படுகோனுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி, Meta AI Voice Chatbot-ன் புதிய குரலாக அவர் மாறியுள்ளார். இனி Meta AI – ல் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளுக்கு தீபிகா படுகோனின் குரலில் பதில் கிடைக்கும். இந்தியா, USA, நியூசி., UK, ஆஸி., கனடாவில் வசிப்போர், இனி தீபிகாவுடன் AI – ல் அரட்டை அடிக்கலாம்.
News October 16, 2025
கர்நாடகா CM மாற்றம்? சித்தராமையா விளக்கம்

கர்நாடகாவில் வரும் நவம்பர் மாதம் CM சித்தராமையா உள்பட அமைச்சரவை மாற்றம் நடக்கும் எனவும், டிகே சிவக்குமார் CM ஆவார் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. நவம்பர் புரட்சி என்று வர்ணிக்கப்பட்ட இத்தகவல் குறித்து அம்மாநில CM சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார். எந்த நவம்பர் புரட்சியும், அதிசயமும் நடக்காது எனவும், வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.