News October 15, 2025

வேலூர் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது

image

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இ பிரிவில் ஏழுமலை பணியாற்றி வந்துள்ளார். வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன பாதுகாவலராக பணி செய்து ஓய்வு பெற்ற ஜெயவேல் உயிரிழந்த நிலையில் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏழுமலை ஜெயவேலின் மனைவியிடம் 10 ஆயிரம் லஞ்சமாக பெறும்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டார். ஏழுமலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

வேலூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

வேலூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில்<> இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

வேலூர் தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

வேலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரிடம் நவம்பர் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithural.org என்ற இணையதளம் அல்லது 0416-2256166 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 17, 2025

வேலூர்: பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிப்பு

image

தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!