News April 16, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறையில் எதிர்வரும் நாட்களில் கோடை வெயில் முன்பு இருந்ததை விட அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார். மேலும் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும் எனவும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News October 18, 2025
மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை சீர்காழி உட்கோட்டங்களில் உட்பட்ட 14 காவல் நிலையங்களுக்கும் நேற்று(அக்.17) இரவு 11 மணி முதல், இன்று(அக்.18) காலை 8 மணி வரை இரவு ரோந்து செல்லும் போலீசாரின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 17, 2025
மயிலாடுதுறை: விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளி பண்டிகை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வழங்கினார். உடன் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
News October 17, 2025
மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <