News October 15, 2025
தீபாவளிக்கு ருசிக்க வேண்டிய பலகாரங்கள்..

தீபாவளி பண்டிகைக்கு, நம் வீட்டில் தாய்மார்கள் கண்டிப்பாக முறுக்கு, சீடை, குலாப் ஜாமுன், மிக்சர் போன்ற பலகாரங்கள் செய்வார்கள். நூற்றுக்கணக்கான பாரம்பரிய பலகாரங்கள் உள்ள நிலையில், ஏன் ஒரு சிலவற்றை மட்டுமே மீண்டும் மீண்டும் ருசிக்க வேண்டும். ஆகையால் இந்த தீபாவளிக்கு, மேற்கண்ட பலகாரங்களை செய்து கொடுக்குமாறு அம்மாவிடம் கேளுங்க..
Similar News
News October 17, 2025
ஸ்விக்கி ஆஃபர்: தங்கம் இனி டோர் டெலிவரி

தீபாவளியை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்டில் தங்கம் ஆர்டர் செய்தால், அது வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும். வரும் 18-ம் தேதி தந்தேராஸ் கொண்டாடப்படும் நிலையில், அன்று பலரும் தங்கம், வெள்ளி வாங்குவார்கள் என்பதால் ஸ்விக்கி இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் 1 முதல் 10 கிராம் 999 ஹால்மார்க் தங்கம், ஒரு கிலோ வெள்ளி கட்டி வரை ஆர்டர் செய்து 10-15 நிமிடங்களுக்குள் பெறலாம்.
News October 17, 2025
எனக்கு கடைசி தீபாவளி.. கேன்சர் நோயாளி உருக்கம்

கேன்சர் தன்னை தோற்கடித்து விட்டதாக 21 இளைஞர் ஒருவர் Reddit தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். பெருங்குடல் கேன்சருக்கு 2023 முதல் அவர் கீமோதெரபி சிகிச்சை எடுத்து கொண்ட போதிலும், உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் இன்னும் சில மாதங்களே உயிர் வாழலாம் என்ற நிலையில், இதுவே தான் கண்டு மகிழவுள்ள கடைசி தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு பலரை கலங்க வைத்துள்ளது.
News October 17, 2025
தீபாவளி ரேஸில் சோலோவாக ஆதிக்கம் செலுத்திய விஜய்

2002 மற்றும் 2003-ல் தீபாவளிக்கு அஜித்துடன் விஜய் படங்கள் அடுத்தடுத்து மோதின. ஆனால் அடுத்து விஜய்யின் படங்கள் மட்டுமே அதிகமாக தீபாவளியை அலங்கரிந்தன. அழகிய தமிழ் மகன்(2007), வேலாயுதம்(2011), துப்பாக்கி(2012), கத்தி(2014), மெர்சல்(2017), சர்க்கார்(2018), பிகில்(2019), லியோ(2023) என அடுத்தடுத்து வந்தன. ஆனால் இனி விஜய் படம் தீபாவளிக்கு வருவதை 2026 தேர்தலே முடிவு செய்யும். உங்களுக்கு பிடித்த படம் எது?