News October 15, 2025
சென்னையில் மழை! ஸ்தம்பித்த வாகனங்கள்

சென்னையில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மதுரவாயல், வானகரம் பூந்தமல்லி நெற்குன்றம், கிண்டி, பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால், பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர்.
Similar News
News October 17, 2025
சாரி சொல்லும் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன்

சென்னை மின்ட் சாலையில் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் 5 வயது குழந்தை முதல் 70 வயது மூதாட்டி வரை சாலையில் நடமாட முடியவில்லை. திமுக ஆட்சியில் 24 லாக்அப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. அந்த குடும்பங்களை போனில் அழைத்து முதலமைச்சர் ‘சாரி’ சொல்கிறார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கைதானவர் ‘சார்-ன்னு’ சொல்கிறார் என தெரிவித்தார்.
News October 16, 2025
ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று தீபாவளி வாழ்த்து கூறினார். இந்நிகழ்வின் போது முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனா ரவீந்திரநாத்குமார் உடன் இருந்தார். இந்நிகழ்வில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் தகவல்.
News October 16, 2025
சென்னை: ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.