News October 15, 2025
தென்காசி: நாய் பொம்மை பரிசளித்த கவுன்சிலர்

இன்று தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய்களின் தொந்தரவு அதிகரித்து வந்த நிலையில், பாஜக கவுன்சிலர்கள் பலமுறை நகராட்சியில் கோரிக்கை வைத்துள்ளனர். நாய்களை கட்டுப்படுத்த தவறிய, 50க்கும் மேற்பட்டவர்களை நாய்கள் கடித்த பின்பும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகராட்சி சேர்மனை கண்டித்து கவுன்சிலர் ரேவதி பாலீஸ்வரன் நாய் பொம்மை பரிசளித்தார்.
Similar News
News October 16, 2025
தென்காசி பயணிகளுக்கு தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

தென்காசி மாவட்ட பயணிகளுக்கு தீபாவளி விடுமுறைக்காக தாம்பரம் – செங்கோட்டை அதிவிரைவு சிறப்பு ரயில் வண்டி எண் 06013. தாம்பரம் இருந்து 17.10.25 (வெள்ளி) இரவு 7:30 புறப்படும். சங்கரன்கோவில் வருகை அதிகாலை 4.40 மணிக்கு வந்துசேரும். செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு சிறப்பு வண்டி எண் 06014 சங்கரன்கோவில் இருந்து 20.10.25 (திங்கள்) இரவு 9:30 புறப்படும். தாம்பரம் வருகை காலை 9.45 மணிக்கு வந்துசேரும்.
News October 16, 2025
சங்கரன்கோவில் அருகே நாய் கடித்து 2 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர் ராமர் (37) மற்றும் முருகையா (66) ஆகியோர் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, வன்னிக்கோனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
News October 16, 2025
தென்காசிக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகம், கேரளா, ஆந்திராவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர், குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மிக கனமழையும், நாளை(அக்.17) தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.