News October 15, 2025
நாகைக்கு ஆரஞ்சு அலெர்ட்!

தமிழகத்தில் நாளை (அக்.16) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று (அக்.15) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
Similar News
News October 16, 2025
மாசற்ற தீபாவளி; விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாசற்ற தீபாவளியை கொண்டாடும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் நாகூர், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி, கீழ்வேளுர் போன்ற முக்கிய பகுதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியது.
News October 16, 2025
நாகை: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நாகை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!