News October 15, 2025
விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
Similar News
News October 17, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (அக்-16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.17ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் <
News October 16, 2025
வேலூர்: குட்கா கடத்தியவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, புதுச்சேரிக்கு காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த புதுச்சேரி மாநிலம் பாகூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் என்பவரை விழுப்புரம் அருகேயுள்ள அரசூர் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீசார் கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் இன்று சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 120 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.