News October 15, 2025

கரூர்: பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி கூலி தொழிலாளி பலி

image

க.பரமத்தி அருகே மேலப்பாளையம் பகுதியில் சேகர் என்பவர் மது அருந்திவிட்டு அவரது மனைவியுடன் வாய் தகராறு ஏற்பட்டதில் நேற்று மனவிரக்தியில் இருந்த சேகர், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Similar News

News October 15, 2025

BREAKING: கரூர் தவெக செயலாளருக்கு ஜாமீன்

image

கரூர் தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெறும் நிலையில், கரூர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மேற்கு மாவட்ட செயலாளருக்கு ஜாமீன் மதியழகன் மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று (அக்டோபர்.15) காவல் நீட்டிப்பு இல்லாமல் ஜாமின் வழங்க உத்தரவிட்டது.

News October 15, 2025

கரூர்: மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி

image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதற்கு நாளை (16.10.2025) கடைசி நாள் ஆகும். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 15, 2025

BREAKING: கரூர் சம்பவம்: பேரவையில் CM விளக்கம்!

image

கரூர் துயர சம்பவம் குறித்து இன்று (அக்.15) சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “த.வெ.க. பிரசாரத்திற்கு வழக்கத்தை விட அதிக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. 41 உயிர்களைப் பலி கொண்ட இத்துயர சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க கூட்டு முயற்சியில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

error: Content is protected !!