News October 15, 2025
கடலூர்: மது குடிக்க இளைஞர் செய்த செயல்!

பண்ருட்டி அருகே செடுத்தான்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவர் நேற்று முன்தினம் இரவு நெய்வேலி 7-வது வட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் அங்கிருந்த மதுவை குடித்து விட்டும், மதுபாட்டில்களை உடைத்து விட்டும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து ராஜேசை கைது செய்தனர்.
Similar News
News October 17, 2025
கடலூர்: ரயில் மோதி இளைஞர் பலி

திருவதிகை அடுத்த நரிமேட்டைச் சேர்ந்தவர் தேசிங்கு (22). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பண்ருட்டி அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி சென்ற ரயில் வருவதை கவனித்த அவர், தண்டவாளத்தில் இருந்து நகர முயன்றுள்ளார். ஆனால், அதற்குள் ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் உடலை கைப்பற்றிய ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News October 17, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News October 16, 2025
மின்னல் தாக்கி பெண்கள் பலி; எஸ்பி விசாரணை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.