News October 15, 2025
ஈரோடு வருகை தரும் பிரபல பாடகர்கள்!

ஈரோடு மாவட்டம், நம்பியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு விக்கிரம நாராயணப் பெருமாள் கோவிலின் புரட்டாசி மாத ஐந்தாவது வாரத்தை முன்னிட்டுச் வரும்அக்.18 மாலை நம்பியூர் பேருந்துநிலையம் ரவுண்டானா அருகில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதில் நாட்டுப்புறக் கலைஞர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நண்பர்கள் சரணாலய அமைப்பினர் செய்து வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் இன்று (16/10/25) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, அருள்நெறி திருப்பணி மன்றம் நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி, வைராபாளையம் (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1), வாசவி சமூகக் கூடம், பவானி (பவானி நகராட்சி), காமாட்சியம்மன் மண்டபம். மேட்டுப்புதூர் (சத்தி நகராட்சி), மயில் மஹால்-திங்களுர்(பெருந்துறை வட்டாரம்) இடங்களில் நடைபெறும்.
News October 16, 2025
ஈரோடு மாவட்ட காவல் இரவு ரோந்து பணியின் விவரம்

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 15/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930, குழந்தைகள் அவசர எண் 1098, அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 15, 2025
ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!