News October 15, 2025

எல்லாருக்கும் BP-யா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்!

image

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்களை பார்த்து, அனைவருக்கும் ஒன்றாக BP அதிகமாகி விட்டதோ என்று நினைத்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். சிறையில் சிறைவாசிகள் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் உள்ளதாக அமைச்சர் ரகுபதியும் கூறிய நிலையில், சபாநாயகர் மற்றும் அமைச்சரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

Similar News

News October 15, 2025

நடிகை மதுமதி காலமானார்

image

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை மதுமதி(87) காலமானார். சிறந்த நடிப்பாலும், அசாத்திய நடனத்தாலும் அன்றைய ரசிகர்களை கட்டிப் போட்டவர் மதுமதி. Ankhen, Mujhe Jeene Do, Shikari ஆகியவை இவரின் முக்கிய படங்களில் சில. ‘என் முதல் குருவே இவர் தான். எனக்கு தெரிந்த நடனம் எல்லாமே அவரிடம் கற்றதுதான்’ என்று நடிகர் அக்‌ஷய் குமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 15, 2025

கோலி, ரோஹித்துக்கு இதுதான் கடைசி தொடரா?

image

விராட் கோலி, ரோஹித் சர்மா ஒன்றாக விளையாடுவதை, ஆஸி ரசிகர்கள் பார்ப்பது இதுவே கடைசிமுறையாக இருக்கலாம் என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஆஸி., தொடருடன் இருவரும் ஓய்வை அறிவிப்பார்கள் என ஒரு கருத்து நிலவி வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கம்மின்ஸின் பேச்சு அமைந்துள்ளது. இந்த தொடரில் ஒருவேளை இருவரும் சொதப்பினால், இந்திய அணியில் அவர்கள் தொடர்வது கடினம் என்பது தெளிவாக தெரிகிறது.

News October 15, 2025

3,000 பேருக்கு வேலை: Hitachi நிறுவனத்துடன் ஒப்பந்தம்

image

5 வருடங்களில், ₹2,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. CM ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ம் ஆண்டு சென்னை போரூரில் CM ஸ்டாலின் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!