News October 15, 2025

திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

image

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News October 16, 2025

இரவு ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அவிநாசி பல்லடம் உடுமலைப்பேட்டை காங்கேயம் தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 16.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.

News October 16, 2025

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எஸ் ஐ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் அக்.22,29, நவ. 5, 12,19, 26, டிச. மாதத்தில் 3, 10 மற்றும் 17-ம் தேதிகளில் மதியம் 2 முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

News October 16, 2025

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூரில் தீபாவளியை ஒட்டி இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காங்கேயம், கரூர், கோவை, பொள்ளாச்சி, சோமனூர், ஈரோடு, பவானி செல்லும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தும். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்தும், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர் செல்லும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லும்.

error: Content is protected !!