News October 15, 2025

திண்டுக்கல்லில் பிஸ்னஸ் ஆசையா..? CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பல்வேறு தொழில்மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்திவருகிறது. தொழில் முனைவோரின் தொழிலை இணையத்தில் பட்டியலிட்டு, வியாபாரம் செய்திட E-Marketplace என்னும் தளத்தை உருவாக்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9487614828 என்ற எண்ணை அணுகலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 31, 2025

திண்டுக்கல்: ஒரே குடும்பத்திற்கும் 20 ஆண்டு சிறை

image

திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 2024-ம் ஆண்டு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சூரியகுமார் (24) & இவருடன் உடந்தையாக இருந்த தந்தை வசிமலை (47), தாய் மாரியம்மாள் (45) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில் மூவருக்கும் 20 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.5,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு!

News December 31, 2025

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திண்டுக்கல் வருகை!

image

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோயம்புத்தூர் செல்லும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தார்.

News December 31, 2025

பழனியில் கோடி கணக்கில் மோசடி? பெண் அதிரடி கைது!

image

பழனி மற்றும் தாழையூத்தை சேர்ந்த ஆடிட்டர் முத்துநாராயணன் என்பவர் தனது நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் கலையரசி (43), ரஞ்சிதா (34) மற்றும் கவுதம் (34) ஆகிய மூவரும் கடந்த 2 ஆண்டுகளாகப் போலி ரசீதுகள் தயாரித்து சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகக் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மேலாளர் கலையரசியை கைது செய்து, தலைமறைவாக உள்ள மற்ற இருவரைத் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!