News October 15, 2025
காரைக்குடி வந்தார் தமிழக ஆளுநர்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா. இரவி ஆகியோர் உடனிருந்தனர்
Similar News
News October 17, 2025
சிவகங்கை மக்களே மழை காலத்தில் கரண்ட் கட்டா..?

சிவகங்கை மக்களே தற்போது மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.
News October 17, 2025
சிவகங்கை: பள்ளி விடுமுறையில் குழப்பமா..?

சிவகங்கை மாவட்டத்தில் இந்த வருடத்திற்கான பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரமாக பெய்து வருகிற நிலையில் மானாமதுரையில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை விடாத காரணத்தினால் மழையில் நனைந்து கொண்டே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகினர்.
News October 17, 2025
சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கலாம்

காரைக்குடி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைப்பதற்கு, குறிப்பிட்டுள்ள தகுதிகளுடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள்/கூட்டமைப்புகள்/தொகுப்புகள் சிவகங்கை (ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில்,சிவகங்கை – 630562 என்ற முகவரியில் வருகின்ற 22.10.2025 விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தகவல்